அமெரிக்காவின் வான்வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த செவ்வாய் அன்று ஈரானை சேர்ந்த ஷியா போராளிகள் அமெரிக்காவின் தூதரகமான பாக்தாவில் உள்ள பகுதியை தாக்கியுள்ளது.
இதன் காரணமாக கடும் கண்டனம் தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப்,ஈரான் இதற்கு மிகப்பெரிய விலையை தர வேண்டி இருக்கும் என்று கூறியுள்ளார்.இந்நிலையில் கடந்த செவ்வாய் அன்று அமெரிக்காவின் 82 வது பேராசூட் பிரிவு வீரர்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதற்கட்ட அடிப்படையில் 750 வீரர்கள் குவைத் பகுதி நோக்கி பயணம் தொடர்ந்துள்ளன.மேலும் 4000 வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளன.
இந்த நடவடிக்கையானது அமெரிக்க பணியாளர்களுக்கும் அவர்களின் உடமைகளுக்கும் எதிரான அதிகரித்த அச்சுறுத்தல்களின் காரணமாக தொடங்கியுள்ளனர்.
மேலும் இதனை ஏற்படுத்தியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட பொருத்தமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் கூறியுள்ளார்.
மேலும் அடுத்த 96 மணி நேரத்திற்குள் சுமார் 750 வீரர்கள் குவைத் பகுதியை சென்றடைவார்கள் என்றும் அங்கிருந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.