இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகை காஜல் அகர்வால் உள்ளார். இவர் தமிழில் அதிகமாக கவனம் செலுத்துவதில்லை அதனால் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடித்து வருகிறார்.
சென்ற ஆண்டு தமிழில் “கோமாளி” திரைப்படத்தில் மட்டும் நடித்தார்.இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.இதை தொடர்ந்து தற்போது தமிழில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் “இந்தியன்-2” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தங்கை நிஷா அகர்வால் தமிழில் “இஷ்டம் ” திரைப்படத்தில் நடித்தார்.இப்படம் வெற்றி பெறாததால் பின்னர் இவருக்கு தமிழில் நடிக்க பெருக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதை தொடர்ந்து மும்பையை சேர்ந்த ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இஷான் என்ற மகன் உள்ளார். தற்போது விடுமுறையை கழிக்க தனது அக்காவுடன் மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு அக்காவுக்கு இணையாக அவரும் பிகினி உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் மாலத்தீவில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.