1 மணிக்கு- நிலவரம்
மாவட்ட கவுன்சிலர் பதவி(515)
அதிமுக- 36 +
திமுக- 56 +
அமமுக- 1
நாம் தமிழர்- 0
ஒன்றிய கவுன்சிலர் பதவி(5067)
அதிமுக- 59+
திமுக- 42 +
அமமுக- 2
நாம் தமிழர்- 0
தபால் வாக்குகள் நிராகரிப்பு
சிவகங்கை, திருப்புவனம் ஒன்றியத்தில் எண்ணப்பட்ட 60 வாக்குகளில் 58 செல்லாதவை எனக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் நாமக்கல் திருச்செங்கோடு ஒன்றியத்தில் பதிவான 118 தபால் வாக்குகளில் 96 செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
முறையான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறி தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
திருநங்கை வெற்றி
உள்ளாட்சி தேர்தலில், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை வெற்றிபெற்றுள்ளார்.
தமிழகத்தில், 27 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றது. அதில், திருசெங்கோடு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக போட்டியிட்ட ரியா என்ற திருநங்கை வெற்றி பெற்றுள்ளார்.
புதுக்கோட்டை, அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், 9வது வார்டில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் தூத்துக்குடி, ஒட்டபிடாரம் 1வது வார்டில் திமுக வெற்றிபெற்றுள்ளது.
மாவட்ட கவுன்சிலர் பதவி- திமுக ஆதிக்கம்
தற்போது வரை மாவட்ட கவுன்சிலர் வாக்கு எண்ணிக்கையில் திமுகவே ஆதிக்கம் செலுத்துகின்றது.
ஆனால், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் அதிமுக ஆதிகம் செலுத்துகின்றது.
திருவண்ணாமாலை மாவட்டத்தில் ஆரணி ஊராட்சி ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, திருவள்ளுர் மாவட்டம் ஆகிய பகுதிகளில் வாக்குகள் எண்ணும் பணிகள் தாமதமாகவே துவங்கின.
வாக்கு சீட்டு முறையில் நடத்தப்பட்ட இந்த தேர்தலில் செல்லாத வாக்கு சீட்டு அதிகம் பதிவாகியுள்ளதாக விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
#LocalBodyElection pic.twitter.com/64x800kZHD
— RS Bharathi (@RSBharathiDMK) January 2, 2020