சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் துணை நடிகை ஜெயஸ்ரீ சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கொலைக்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தசரதபுரத்தில் வசித்து வந்தவர் நடிகை ஜெயஸ்ரீ. பல திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ள இவர் இன்று தன் வீட்டில் இறந்து சடலமாக கிடந்துள்ளதை பொலிசார் கண்டுப்பிடித்துள்ளனர்..
ஜெயஸ்ரீ சடலத்தை கைப்பற்றிய பொலிசார் அதை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
ஜெயஸ்ரீ நகைக்காக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா என பொலிசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சில வாரங்களுக்கு முன்னர் தான் தொலைக்காட்சி நடிகை சபர்ணா சென்னையில் உள்ள தனது வீட்டில் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.