கிளிநொச்சி – கனகபுரம் வீதியில் புத்தாண்டு தினமான நேற்று லொறி ஒன்றுடன் மோதி இரு இளஞர்கள் ஸ்தலத்தில் பலியாகியிருந்தனர்.
நேற்று அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் இளைஞர்கள் இருவரும் உயிாிழந்த சம்பவம் தொடர்பான காரணம் தற்பொழுது வெளியாகியிருக்கின்றது.
குறித்த இளைஞா்கள் இருவரும் கிளிநொச்சி நகாில் உள்ள இராணுவ முகாம் ஒன்றுக்குள் பட்டாசு கொழுத்தி எறிந்துள்ளனர்.
இந்நிலையில் படையினர் தம்மைப் பிடிக்க வந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் அதிவேகமாக தலைக் கவசமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்தியுள்ளனர் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர் .
இருப்பினும் இளைஞர்கள் இருவரையும் இராணுவத்தினர் துரத்திச் செல்லவில்லையெனவும் தெரிவித்துள்ளனர். இதன்போது மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய குறித்த இளைஞா்கள் வேக கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி உயிாிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.