சினிமா என்பது ஒரு கனவு தொழிற்சாலை. திரையில் நாம் காணும் நடிகர், நடிகைகள் நிஜத்திலும் அப்படியே எந்த விதத்திலும் இருப்பதில்லை. முக்கியமாக காதல், கல்யாணம் போன்ற விடயங்களில் பெரும்பாலான நடிகர், நடிகைகள் சறுக்கவே செய்கிறார்கள்.
அப்படிப்பட்ட விடயங்களில் பிரபல இந்தி கவர்ச்சி நடிகை பிபாஷா பாசு அதிகம் சிக்கி பரபரப்பாக பேசப்பட்டவர் ஆவார்.
மொடலாக தன் வாழ்க்கையை ஆரம்பித்த பிபாஷா பாசு கடந்த 2001 ஆம் ஆண்டில் தன் திரையுலக பயணத்தை ஆரம்பித்தார். அதன் பின்னர் புகழடைய ஆரம்பித்ததும், அவருக்கும் பிரபல இந்தி நடிகர் ஜான் ஆப்ரகாமுக்கும் காதல் அரும்பியது.
எட்டு வருடங்களுக்கும் மேலாக நகையும் சதையுமாக இருந்த இவர்கள் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள்.
இந்த காதல் தோல்வியை பற்றி பிபாஷா பாசு கூறுகையில், என் காதல் வாழ்க்கையில் நான் அடிமைப்பட்டதை போல தான் உணர்ந்தேன். இப்போது தான் சுதந்திர பறவையாக உள்ளேன். நம்மை மதிக்காதவர்களுக்காக நம்மை நாமே இழப்பது பெயர் காதல் இல்லை என கூறும் பிபாஷா அவரவர் போக்கில் வாழ்வது தான் மகிழ்ச்சி. மற்றவர்களுக்காக நம்மை முற்றிலும் மாற்றிக்கொள்ள முற்படுவது நடக்காத காரியம் என கூறுகிறார்.
ஆனால் பிபாஷா தான் கூறியது போல தனிமை சுதந்திரத்தை இன்று அனுபவிக்கவில்லை. காரணம், போன வருடம் அவர் பிரபல நடிகர் கரண்சிங்கை திருமணம் செய்து கொண்டார்.
அதற்கும் விளக்கமளிக்கும் அவர், என் சுதந்திரமும், எதிர்கால திட்டங்களும் பாதிக்காத அளவுக்கு இந்த திருமணம் என்னை காப்பாற்றும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.
நடிகர், நடிகைகள் பொதுவாக அதிக சுதந்திரத்தை விரும்புகிறவர்கள். அவர்களை யாரும் கட்டுப்படுத்தினால் அவர்களுக்கு அது பிடிப்பதில்லை.இது தான் பல விவகாரத்துக்களுக்கும், காதல் முறிவுகளுக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை மறுக்க இயலாது.