பிரபல டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நாயகி தொடர் கதாநாயகி ஆனந்தி வாழ்க்கையில் கடந்த வருடம் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
நாயகி தொடரில் கிடைத்த புகழ் மூலம் தடம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2019 தான் தடம் படம் ரிலீஸ் ஆனது.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்து இருந்தார். இந்த படத்திற்கு பிறகு தற்போது ஐந்து படங்களில் கமிட்டாகியுள்ளார். அதுவும் இரண்டு படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
அது மட்டும் அல்ல, எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு 2019 ஆம் ஆண்டு அவருக்கு நிறைய லவ் ப்ரோபோசல் வந்து குவிந்தது.
நபர் ஒருவர் வித்தியாசமான முறையில் லவ் ப்ரொபோஸ் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அதவது, குறித்த நபர் அவருடைய மொத்த சொத்து விவரம், குடும்பத்தின் விவரங்கள் எல்லாம் அனுப்பி கல்யாணம் பண்ணிக்குமாறு குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்து நாயகி ஆனந்தி அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனை அண்மையில் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.