ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய களுபோவில வைத்தியசாலை நுழைவாயிலில் நிழல் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நோயாளர்களை பார்ப்பதற்காக வரும் உறவினர்கள் வைத்தியசாலையின் நுழைவாயிலில் முகங்கொடுக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வினை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய வெயில் படாத வகையில் நிழல் கூரைகள் உடனடியாக பொருத்தப்பட்டுள்ளன.
வைத்தியசாலையில் நோயாளர்களை பார்க்க வரும் உறவினர்கள், நோயாளர்களை பார்ப்பதற்கான நேரம் வரை நுழைவாயிலின் அருகில் நிற்பதை ஜனாதிபதி அவதானித்துள்ளார்.
மழை, வெயில் போன்றவற்றால் அவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.
இதனையடுத்து உடனடியாக அவர்களுக்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு ஜனாதிபதி தொலைபேசி ஊடாக அறிவுறுத்தல் விடுத்தார்.
அதற்கமைய இரண்டு வாரங்களுக்குள் நிழல் கூரைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நோயாளர்களை பார்க்க வரும் உறவினர்கள் அமர்வதற்கான ஆசனங்களும் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.