தமிழ் திரை துறையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பா.ரஞ்சித், சமீபகாலமாக அரசியல் பேசி வருகிறார். மேலும், இவர் இயக்கும் மற்றும் தயாரிக்கும் அனைத்து படங்களிலும் சாதிய குறியீடுகள் இல்லாமல் இருக்காது. அவரது படங்களில் ஆதிக்கசாதி மக்களை அசிங்கப்படுத்துவதும், அவர்களை கொடுமைக்காரர்கள் போலவும் காட்டுவார்.
மேலும் அவர் எடுக்கும் படங்கள் அனைத்தும் கதாநாயகன் ஏழ்மையானவராகவும், கதாநாயகி உயர் சாதியை சார்ந்தவளாகவும் காட்டுவார். மேலும், அந்த பெண்ணின் உறவினர்களை கொடுமைக்காரர்களாகவும், கொலைகாரர்களாகவும், காட்டுமிராண்டித்தனமான கூட்டமாகவும், சித்தரிக்கப்பட்டு அவர் படத்தை எடுப்பார்.
அந்த வகையில், சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கும் திரைப்படங்களில் வெளிவந்த “பரியேறும் பெருமாள்”, “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” ஆகிய படங்களிலும் உயர்சாதி பெண்ணான ஆனந்தியை வைத்து தான் படங்களை தயாரித்து இருப்பார். தொடர்ந்து அவர் எடுக்கும் படங்களிலும் ஆனந்தியை தான் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்திருக்கிறாராம்.
இதுகுறித்து திரைத்துறை வட்டாரத்தில், ஆனந்தியை அவர்களது ‘செட் பிராப்பர்ட்டி’ ஆகவே மாற்றி விட்டார்கள் போலும், என்றும் பேசி வருகிறார்கள். பொதுவாகவே பா. ரஞ்சித் வெளிப்படையாகவே பல மேடைகளில் அவரது சாதியை குறிப்பிட்டு பேசி வருகிறார். மேலும் அவர் எடுக்கும் படங்களிலும் அவரது சாதியை முன்னிறுத்தி படங்களை தயாரிப்பார். இதில் இருந்தே அவரது சாதி அரசியல் நல்லாவே தெரிகிறது.
மேலும், அவர் படங்களில் அவரது சாதிக்காரர்களுக்கு மட்டுமே வேலை வேலை கொடுப்பார். ஆனால், ஏன்? கதாநாயகி மட்டும் ஆதிக்க சாதியான ஆனந்தியை நடிக்க வைக்கிறார். அவர் சாதியிலேயே ஒரு பெண்ணை நடிக்க வைக்கலாமே? என்று சமூக வலைதளங்களில் பலர் அவரை கேள்வி கேட்டு வருகிறார்கள்.
இதை தொடர்ந்து, வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. தற்போது அவர் சமீப காலமாகவே அரசியல் பேசி வருகிறார் என்பது அனைவருக்கு நன்கு தெரிந்ததே. இதைத் தொடர்ந்து, சென்னை போராளிகளுக்கு அவ்வப்போது பா.ரஞ்சித் பணம் வழங்கி வருகிறார், அந்த பணமானது பங்களாதேஷ் வழியாக மம்தா மூலமாக ஜிக்னேஷ் மேவானியிடம் இருந்து தான் கை மாறுவதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது பா. ரஞ்சித்திற்கு மட்டுமே வெளிச்சம்.