லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் ‘டோரா’ படத்தின் இசை நேரடியாக ஆன்லைனில் வெளியாகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் திகில் திரைப்படத்தின் படப்பிடிகள் முடிவடைந்து தற்போது இறுதிக் கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இப்படத்தின் பாடல்களை சிங்கிள் டிராக்காக நேரடியாக ஆன்லைனில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ‘டோரா’ படத்தின் இசை உரிமத்தை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இப்படம், ஒரு கொலை சம்பவத்தின் விசாரணையை பற்றிய படம் என கூறப்படுகிறது. மிகவும் சீரியசான கதை என்பதால் இதில் காதல் காட்சிகளுக்கு இடமில்லை என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேமிசந்த் ஜபாக் தயாரித்துள்ள இப்படம் நயன்தாராவின் திரையுலக வாழ்வில் மிகவும் சவாலான படம் எனக் கூறப்படுகிறது.
இப்படத்தில் ஹரிஷ் உத்தமன், சுலில் குமார், தம்பி ராமையா உள்ளிடோர் நடித்துள்ளனர். ‘வடகறி’ படத்துக்கு இசையமைத்த விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் இருவரும் இசையமைத்துள்ளார்.
இசை, டிரைலர் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பபர்க்கப்படுகிறது.