இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதல் காரணமாக குறிப்பிட்ட நாட்டினருக்கு கட்டணமில்லா விசா இருந்த நிலையில், தற்போது அது மேலும் நீடிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலினால், சுமார் 250-க்கும் மேற்பட்டார் பரிதாபமாக இறந்தனர்.
இதனால் இலங்கைக்கு சுற்றுலா வரும், வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை குறைவானது. அதை மீட்டெடுக்க சுற்றுலாத் துறை போராடி வந்தது. அதன் காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு கட்டணமில்லா விசாவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைமுறை படுத்தியது.
இது 6 மாதம் வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும், அதன் பின் சோதனை காலத்தின் வெற்றியை பொறுத்து இது நீடிக்குமா? இல்லையா? என்பது முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மாதத்தின் இறுதியோடு இந்த நடைமுறை முடிவடையவுள்ளதல், இது வரும் ஏப்ரல் மாதம் 30-ஆம் திகதி வரை இலங்கை அரசு நீடிக்க முடிவு செய்துள்ளதாகவும், இதனால் முதலில் 39 நாடுகளுக்கு வழங்கப்பட்ட இந்த சலுகையில் மேலும் 10 நாடுகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் China, India, Denmark, Sweden, Norway, Finland, Iceland, Philippines, Russia மற்றும் England போன்ற நாடுகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.
இலவசா விசா என்பது குறிப்பிட்ட நாட்டில் இருந்து, இலங்கைக்கு சென்றால் அங்கு ஒரு குறிப்பிட்ட தொகை கட்ட வேண்டும்(உதாரணமாக, இந்தியாவில் இருந்து இலங்கை சென்றால் அங்கு விசாவிற்கு 2400 ரூபாய் கட்ட வேண்டும்) அது இந்த ஏப்ரல் மாதம் 30-ஆம் திகதி இந்த நாட்டினர் கட்ட தேவையில்லை.
கடந்த 2018-ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணமாக 2 பில்லியன் மக்கள் சுற்றுலாப்பயணிகளாக வருகை தந்துள்ளனர். அதே சமயம் இந்த கடந்த 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 1.6 பில்லியன் மக்கள் மட்டுமே வந்துள்ளதாக, இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது