இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டோனி அணியில் நுழைவதற்கு ஒரே வாய்ப்பு தான் உள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான கும்ப்ளே கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடருக்கு பின், டோனி எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடாமல் ஓய்வில் இருக்கிறார்.
அது மட்டுமின்றி டோனி எந்த ஒரு முடிவையும் திடீரென்று அறிவிப்பவர், இதனால் அவர் இப்படி அமைதியாக இருப்பது, அவரது ரசிகர்கள் பலருக்கும் கவலையாக உள்ளது. இருப்பினும் டோனி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவு குறித்து வரும் ஜனவரி மாதம் வரை கேட்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.
இதனால் டோனி மீண்டும் விளையாட ஆர்வமாக இருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான கும்ப்ளே, டோனி குறித்து கூறுகையில், டோனி வரவிருக்கும் உலகக்கோப்பை டி20 போட்டியில் விளையாடுவதற்கு விருப்பமாக இருக்கிறார்.
ஆனால் அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது என்பது தான் உண்மை, இருப்பினும் டோனி மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய வேண்டும் என்றால் ஒரு வாய்ப்பு இருக்கிறது.
அதாவது இன்னும் சில மாதங்களில் ஐபிஎல் தொடர் துவங்கவுள்ளது. இதில் டோனி சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவரை ஒரு சிறந்த பினிஷராக தேர்வு குழுவினர் மீண்டும் இந்திய அணியில் எடுக்கலாம், அதற்கு டோனி ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.