தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை நேற்று மாலை திடீரென மோசமானதாக வெளிவந்த தகவல்களை அடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது முதல்வரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் முதல்வர் விரைவில் பூரண குணமடைய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகரிடம் தமிழக முதல்வரின் உடல் நலம் குறித்து பிரதமர் மோடி விசாரித்ததாகவும், பிரதமர் எந்த நேரமும் சென்னை வர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.