நாடளாவிய ரீதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக டெங்கு நோய் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதுவரையில் இந்த வருடம் மாத்திரம் 47182 டெங்கு நோயாளர்கள் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றது.
அத்துடன் குறித்த டெங்கு நோயில் பாதிக்கப்பட்டு 76 பேர் இதுவரையில் இறந்துள்ளனர்.
மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 14376 டெங்கு நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.
இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் 6000 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 3088 பேரும், கண்டியில் 3754 பேரும், காலி மாவட்டத்தில் 2394 பேரும் டெங்கு நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2026 பேரும், குருணாகலில் 2286 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 2729 மற்றும் கேகாலையில் 1357 பேரும் பதுளையில் 1032 டெங்கு நோயாளர்களும் இணங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஒருவருக்கு தொடர்ந்தும் 03 நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நிலவுமானால் உடனடியாக வைத்திய ஆலோசகரை அணுகுமாறும் தெரிவிக்கப்படுகின்றது.