போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி உத்தரவுக்கு அமைய, நாடு முழுவதும் செயற்படும் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
போலி ஆவணங்கள் சமர்ப்பித்தல் மற்றும் வயது குறைந்தவர்களை வெளிநாட்டு தொழிலுக்கு ஈடுபடுத்தல் ஆகிய விடயங்களுக்கு உதவும் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களை சுற்றிவளைத்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் இடம்பெறும் பல்வேறு முறைக்கேடுகள் தொடர்பில் அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.
கண்காணிப்பு நடவடிக்கையில் 17 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 36 பேர் ஈடுபட்டுள்ளனர்.