பிறக்கப் போகும் புத்தாண்டு 2020 அற்புதமான ஆண்டாக உள்ளது. கூட்டுத்தொகை 4. ராகுவின் ஆதிக்கம் கொண்ட ஆண்டு. ராகு நிழல் கிரகம் அதைப் போலவே இந்த ஆண்டும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை உணர முடியாத வகையில் இருக்கும். இந்த புத்தாண்டில் பிறந்த தேதியின் அடிப்படையில் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். 4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2020ம் ஆண்டு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
பிறந்த ராசி நட்சத்திரம் பிறந்த லக்னம் தெரியாதவர்களுக்கு இந்த 2020 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று எண் கணிதத்தின் மூலம் பார்க்கலாம். 4ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பிறக்கப் போகிற புத்தாண்டு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். நான்காம் எண்ணின் அதிபதி ராகு. 2020ம் ஆண்டின் கூட்டுத்தொகை 4.
நான்காம் எண் ராகுவின் ஆதிக்கம் கொண்ட எண் நிழல் கிரகம். ராகுவிற்கும் சந்திரனுக்கும் எப்படிப்பட்ட பகை இருக்கும் என்று புராணங்களில் மூலமாக நாம் அறிந்திருக்கிறோம். ராகுவின் ஆதிக்கம் கொண்ட இந்த புத்தாண்டில் 4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கும் 4 ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என பார்க்கலாம்.
திறமைசாலிகள்
எதையும் மாத்தி யோசிக்கும் குணம் கொண்ட 4ஆம் எண் காரர்களே உங்க குணாதிசயமே வித்தியாசமானது. எதையும் தலைகீழாகத்தான் யோசிப்பீர்கள், 4 ஆம் எண் குணாதிசயங்கள். சினிமா துறை எழுத்துத்துறையில் உள்ளவர்கள். கதாசிரியர், ஆராய்ச்சியாளர்கள் தினசரி ஏதாவது ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள். இவர்களிடம் எந்த ரகசியமும் தங்காது. இவங்க எப்பவுமே மத்தவங்களுக்கு வழிகாட்டியாக இருப்பாங்க. வெற்றிக்காக பிறரை முன்னே வழிநடத்தி செல்வார்கள்.
கோபக்காரர்கள்
இந்த 4 ஆம் எண்ணை பிறந்தநாளாகக் கொண்டவர்கள், எதையும் திட்டமிட்டு செயல்படுத்துவார்கள். போதும் என்ற குணம் இவர்களுக்கு கிடையாது. எதையும் நெளிவு சுளிவோட இருப்பார்கள். காரணம் பாம்பு கிரகம்தானே பல திறமைகள் கொண்டவர்கள். அதே நேரத்தில் பொறுமையோ, நிதானமோ கிடையாது. நிறைய எதிர்பார்ப்பு இருக்கும் அது கிடைக்காத போது நிறைய மன அழுத்தம் ஏற்படும். பிறருக்கு வாரிக்கொடுக்கும் வள்ளல், அதே போல கோபம் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் சிறந்த குணம் இருக்கும்.
4ம் எண் எப்படி இருக்கும்
2020 கூட்டணியே 4 தான். இந்த எண்ணின் கூட்டுத்தொகை 4,13,22,31ல் பிறந்தவர்களுக்கும் பெயர் கூட்டுத்தொகை 4 வருபவர்களுக்கும் மிகப்பெரிய மாற்றத்தையும் மிகப்பெரிய திருப்புமுனையையும் ஏற்படுத்தும். நீங்க எந்த திட்டமிடல் இல்லாமல் இருந்தாலும் உங்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும். நிதி நிலையில் மிகப்பெரிய உச்சநிலைக்கு கொண்டு செல்லும்.
பேச்சில் கவனம் தேவை
பொறுமையாக இருங்க எல்லாமே தேடி வரும், பதவிகள் தேடி வரும். பேச்சில் நிதானம் தேவை, பொறுப்புகள் அதிகரிக்கும். பைல்களை கையாளும் போது கவனம் தேவை. பணத்தை கையாளும் போது கவனம், வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்பு வந்தால் இதை ஏற்றுக்கொள்ளுங்கள் அக்கம் பக்கம் பார்த்து பேசுங்க, பகலிலோ, இரவிலோ பேசும் போதோ செல்போனில் பேசும் போது கூட கவனமாக பேசுங்க உங்க பேச்சே உங்களை வம்பில் மாட்டி விடும்.
பணம் விசயத்தில் கவனம்
வீடு மனை வாங்கவும், வீட்டு மனை புதுப்பிக்கவும் பணம் கிடைக்கவும். குழந்தைகளிடம் அன்பாக பேசி பழகுங்கள் அதிகாரம் செலுத்த வேண்டாம். கடன் வாங்கவோ கடன் கொடுக்கவோ வேண்டாம். குடும்ப விசயங்களில் மூன்றாம் நபர்களை தலையிட விட வேண்டாம். உங்களுக்கு அதிர்ஷ்டங்கள் மூலம் இந்த ஆண்டு பணம் வரும். பூர்வீக சொத்து விசயங்களில் கவனமாக இருங்க. செய்யும் தொழிலில் சலிப்பு வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் தேடி வரும்.
நிம்மதியான ஆண்டு
சிங்கிளாகவே இருக்கோமே நமக்கு ஜோடி கிடைக்காதோ என்று ஏங்கிக்கொண்டிருந்தால் உங்களுக்கு 2020ஆம் ஆண்டில் ஒரு துணை கிடைக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தைகள் பிறக்கும். பங்குவர்த்தகத்தில் கவனமாக முதலீடு செய்யவும், ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் கவனம் தேவை. சட்டத்திற்கு புறம்பான விசயங்களை செய்யாதீங்க. பெண்களின் கனவு நனவாகும். பெற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். ரத்த பந்த உறவுகளுடன் இருந்த பகை நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிம்மதி கிடைக்கும்.