Loading...
பசறை மடுசீம 6ஆம் கட்டைப் பகுதியில் சற்று முன்னர் பஸ் ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காயங்களுக்குள்ளான 30 பேரில் 7 பேர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளதாகவும், மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் எனவும் வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
Loading...
இந்த விபத்துக்குறித்த மேலதிக தகவல்கள் இது வரை வெளியாகாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...