திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் 21 வயதுடைய இளம் யுவதி ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதியை நேற்றையதினம் கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட பெண்ணிடிமிருந்து 590 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கபடுகின்றது.
கைதான இளம்பெண் போதை பொருள் விற்பனையில் ஈடுபடுபவர் எனவும் ,விற்பனைக்காக ஹெரோயினை வீட்டில் பதுக்கி வைத்திருந்த நிலையிலே சந்தேக நபரை கைது செய்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
பெண்ணின் கணவர் ஏற்கனவே போதைபொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் ஏற்கனவே தம்மால் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர் என்றும் பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
மேலும் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட ஹெரோயினையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.