Loading...
திருகோணமலை மூதூர் கிளிவெட்டி பகுதியில் கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரை தாம் இன்று கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரிடமிருந்து 30 கிராம் கேரள கஞ்சாவைக் கைப்பற்றியதாகப் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
திருகோணமலை – மூதூர் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading...
குறித்த சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும் பொருட்டு மூதூர் பொலிஸார் வசம் ஒப்படைத்துள்ளதாகவும் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...