பசில் ராஜபக்சவினால் உருவாக்கப்பட்டுள்ள புதிய கட்சியின் சமூக வலைத்தள செயற்பாட்டிற்காக இளைஞர்கள் சிலர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அந்த இளைஞர்கள் மஹிந்த ராஜபக்சவின் செல்வாக்கை மேம்படுத்துவதற்கான நோக்கத்திற்காகவே பேஸ்புக் வலைத்தளத்திற்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
எனினும் அண்மையில் பசில் ராஜபக்ஷவை சந்தித்த, பேஸ்புக் செயற்பாட்டாளர்கள் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளனர்.
2020ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலுக்காக கோத்தபாய ராஜபக்ச போட்டியிடவுள்ளமையினால், இதன் ஊடாக கோத்தபாயவின் செல்வாக்கை அல்லாவா மேம்படுத்த வேண்டும் என வினவியுள்ளார்.
2020ஆம் ஆண்டு தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடமாட்டார். அதற்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளமையினால் மஹிந்தவை பிரதமராக்க வேண்டும். அதற்கு அடுத்த செயற்பாட்டிற்கு கோத்தபாய அல்லாத ராஜபக்ச ஒருவர் போட்டியிடுவதாக பசில் குறிப்பிட்டுள்ளார்.
அது யார் என பசிலிடம் கேட்ட போது சிரித்தவாறு கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றுள்ளார். அந்த ராஜபக்ச யார் என்பது தற்போது குழப்பத்தை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.