சிலர் உணவு பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைத்தாலோ உறைய வைத்தாலோ போதுமானது என்று நினைத்து பல நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்துகின்றனர்.ஆனால் அதுவும் கெடுதியானது என்பதை அறிவதில்லை.
குளிரூட்டப்பட்ட உணவேயானாலும் அதற்கும் சில விதிகள் உண்டு. குறிப்பிட்ட நாட்களுக்குள் அவற்றை பயன்படுத்தி விட வேண்டும்.
குளிர்சாதன பெட்டியை நிரப்புவதில் கவனம் கொள்ளாமல், அதில் வைக்கும் உணவுகளை சரியான நேரத்தில் பயன்படுத்தும் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்.
பொதுவாக சில உணவுகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தவே கூடாது. அதில் ஒன்று முட்டை.
முட்டைகளில் விரைவில் பாக்டீரியா தொற்று உண்டாகிவிடும் அபாயம் உள்ளது. குறிப்பாக வயிற்றிற்கு கேடு விளைவிக்கும் சால்மோனெல்லா வகை பேக்டீரியா முட்டைகளின் ஓடுகளில் உருவாகும்.
கோழி முட்டையிடும்போது அதன் ஓடுகளில் சால்மோனெல்லா பேக்டீரியாக்கள் உருவாவது இயல்பானது. பேக்டீரியாக்கள் கொண்ட முட்டைகளை நாம் வாங்கியவுடன் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிறோம்.
சால்மோனெல்லா பேக்டீரியா வளர தட்ப வெப்ப நிலை சாதகமாக குளிர்சாதனப் பெட்டி தருகிறது. மிகவும் குளிர்ந்த ஈரப்பதம் உடைய தட்ப வெப்ப நிலையில் சால்மோனெல்லா பலமடங்கு பெருக்கம் செய்ய ஏதுவாக இருக்கிறது. இதனால் பேக்டீரியா பலமடங்கு பெருகி நோய்களை உருவாக்க தயாராகிறது.
சாதாரண அறைவெப்பத்தில்( 37டிகிரி) இந்த பேக்டீரியா வளர்ச்சி அடைய முடியாது. இதனால் அவை இறந்துவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வயிறு சம்பந்த நோய்கள்
இந்த பேக்டீரியா சாதரண வெப்ப நிலையில் உயிர் வாழ்வதில்லை. அதிக ஈரப்பதம் கொண்ட குளிர் நிலையில் மிக விரைவில் பெருக்கமடைகின்றன. இதனால் குடல் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.
குற்றம்
- ஐரோப்பா நாடுகளில் குளிர்சாதனப்பெட்டியில் முட்டைகளை வைக்கக் கூடாது.
- அமெரிக்காவிலும் முட்டைகளை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பது சட்டப்படி குற்றமாகும்.
- சாதரண அறை வெப்பத்திலேயே வைத்து உடனுக்குடன் உபயோகியுங்கள்.