Loading...
மூன்று பிள்ளைகளின் தாயான காரைநகர் முன்பள்ளி ஆசிரியையொருவர் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி 3 பாடங்களிலும் திறமை சித்தி எய்தி பல்கலைக்கழகம் புகும் வாய்ப்பை பெற உள்ளார்.
காரைநகர் பிட்டியெல்லை பேரம்பலம் முன்பள்ளி ஆசிரியரும் காரைநகர் கோட்ட முன்பள்ளிகளின் இணைப்பாளருமான திருமதி கிளியோபட்ரா என்பவரே இந்த சாதனைக்கு சொந்தக்காரி ஆவார்.
Loading...
ஊடகம், இந்து நாகரிகம், நாடகமும் அரங்கியல் ஆகிய பாடங்களிலேயே இவர் திறமை சித்தியை பெற்றுள்ளார்.
காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை நடாத்திய தாய்மார்களுக்கான குழந்தை வளர்ப்புக் கலை பரீட்சையில் 90 புள்ளிகளுக்கு மேல் பெற்று பதக்கம் வழங்கி அண்மையில் இவர் கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Loading...