ஈரான் படைத்தளபதி காசிம் சுலைமானி அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டு அதனால் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் குறித்து 28 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த அவசர ஆலோசனை பிரான்ஸ் நாட்டின் பிரசல்ஸ் நகரில் நடைபெற்றுள்ளது.
இதன்போது அமெரிக்கா ஈரான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் அதை கட்டுப்படுத்த ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த 2015ஆம் ஆண்டு போடப்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக ஈரான் அறிவித்தது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கடந்த வாரம் ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் ஈரான் நாட்டு ராணுவ படைதளபதி ஜெனரல் காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்ட நிலையில், ஈரான் அமெரிக்கா இடையே சண்டை மூண்டது .
இந்நிலையில் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க படைகள்மீது ஈரான் தாக்கத் தொடங்கியதுடன் அமெரிக்காவின் al-azhar விமானதளம் மீதும் ஈரான் 12 ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது .
சுலைமானி படுகொலைக்காக அமெரிக்காவை ஈரான் கடுமையாக எச்சரித்ததுடன், அமெரிக்கா மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தது .
அத்துடன் கடந்த 2015ஆம் ஆண்டு போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும் இனி அந்த ஒப்பந்தம் ஈரானை கட்டுப்படுத்தாது எனவும் ஈராக் அறிவித்தது.
அத்துடன் , யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்கப் போவதாகவும் ஈரான் அறிவித்ததை அடுத்து , அணு ஆயுதப் போர் அது ஏற்பட வழிவகுத்து விடும் என்ற ஆபத்து உள்ளதால் இந்த ஆலோசனைக் கூட்டம் அவசரமாக நடத்தப்பட்டுள்ளது .
இதில் அமெரிக்கா , ரஷ்யா , பிரிட்டன் , பிரான்ஸ் , ஜெர்மனி , உள்ளிட்ட 28 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர் .
அப்போது ஈரானின் அத்துமீறலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான நிலையை தணிக்கும் வழிமுறைகள் தொடர்பிலும் ஆராய்ந்து வருவதாகவும் பிரான்ஸ் நாட்டு அமைச்சர் ஜூன் வைஸ் டிரயன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது .