Loading...
ஸ்காட்லந்தில் புகைபிடிப்பதன் தொடர்பில் புதிய சட்டம் ஒன்று அமலாக்கப்பட்டுள்ளது. அதன்கீழ், கார்களில் பிள்ளைகள் உடனிருந்தால், புகை பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் அரசாங்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகப் புதிய சட்டம் அமைகிறது.
Loading...
இன்று முதல் அது நடப்புக்கு வருவதாகக் கூறப்பட்டது. 18 வயதுக்குக் கீழானவர்கள் உடனிருக்கும் கார்களில் புகைபிடிப்பவர்களுக்கு 127 டாலர் அபராதம் விதிக்கப்படும்.
2034ஆம் ஆண்டுக்குள் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கையை 5 விழுக்காட்டுக்கும் கீழ் குறைப்பதற்கு ஸ்காட்லந்து அரசாங்கம் முயற்சி எடுத்துவருகிறது.
Loading...