முன் அறிவித்தல் இன்றி குற்றப் புலனயவுப் பிரிவு தலைமையகமான 4 ஆம் மாடி கட்டடத் தொகுதிக்கு வந்து, அங்கு மின் தூக்கி மற்றும் வரவேற்பு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களை கேவலமாக திட்டி, துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் விடயம் தொடர்பில் கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக சி.ஐ.டி. கோட்டை நீதிவானுக்கு அறிவித்தது.
இந் நிலையில் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்து சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி. மன்றுக்கு அறிவித்தது.
இந் நிலையில் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை எதிர்வரும் மார்ச் மாதம் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளது.