நஞ்சற்ற பாரம்பரிய உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தில் இலைகஞ்சி விற்பனை நிலையம் நிலையம் அங்குரார்பணம் செய்துவைக்கப்பட்டது.
புதன்கிழமை இன்று (8) காலை11 மணியளவில் கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜெ.அதிசயராஜ் தலைமையில் பாரம்பரிய உணவகம் திறந்துவைக்கப்பட்டது.
தொழில் முயலுனர்களை ஊக்குவிக்கும் பாரம்பரிய நஞ்சற்ற உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடனும் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட “விதாதா தொழில்முயலுனர்” ஒருவருக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி வைக்கும் திட்டமாகவும் இவ் இலைகஞ்சி விற்பனை நிலையம் ஆரம்பிக்கப்பட்ள்ளதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து பிரதேச செயலாளர் உட்பட ஏனைய உத்தியோகஸ்த்தர்களும் இலைகஞ்சியினை கொள்வனவுசெய்து அருந்தியமையும் குறிப்பிடதக்கது.