18 வயதிற்கு குறைந்தவர்கள் திருமணம் செய்வதைத் தடுக்கும் தனிநபர் சட்ட வரைபு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துசித விஜேமன்ன இதனை சமர்ப்பித்தார்.
இந்த வரைபின்படி, இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நடைபெறும் எந்தவொரு திருமணமும், ஆண், பெண் ஆகிய இருவரும் 18 வயது அடைந்திருந்தால் மாத்திரமே சட்டபூர்வமானதாகும்.
வயது, இனம், மதம், மொழி, சாதி, பாலினம், அரசியல் பார்வைகள், பிறந்த இடம் அல்லது வேறு எந்த விஷயத்தையும் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களுக்கும் சமமான பாதுகாப்பை இலங்கை உறுதி செய்துள்ளது என்றும் வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான மன மற்றும் உடல் ரீதியான வன்முறைகளைத் தடுப்பதற்கான ஒரு தனிநபர் சட்ட வரைபான இந்த வரைபு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.