அமெரிக்கா பதிலடி தாக்குதலை தொடுத்தால் 100 அமெரிக்க இலக்குகள் தாக்கி அழிக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமது நாட்டு இராணுவத்தளபதி கொலையை அடுத்து ஈராக்கிலுள்ள அமெரிக்க படைமுகாம்களை குறிவைத்து ஈரான் அரசுப்படைகள் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியிருந்தன.இந்த தாக்குதல்களில் 80 இற்கும் மேற்பட்ட அமெரிக்கப்படைகள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்திருந்தது.
ஆனால் ஈரான் நடத்திய தாக்குதலில் தமது தரப்பில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்கா ஏதேனும் பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டால், ஈரான் மேலும் 100 இலக்குகளை குறிவைக்கும் எனவும் ஈரான் தொலைக்காட்சி சேவையொன்று அங்குள்ள இராணுவ தகவல்களை ஆதாரம் காட்டி செய்தி வெளியிட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் மேலும் குறிப்பிட்டுள்ளன.