Loading...
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவி தொடர்பில் தீர்க்கமான முடிவெடுக்க கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிகோத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்தார்.
Loading...
இன்றைய கூட்டத்தில் கட்சியின் எதிர்கால செயற்பாடு மற்றும் கட்சித் தலைமை தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.
இந்தக்கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் சஜித்பிரேமதாச இருவரும் தலைமை தாங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Loading...