சீனாவிலுள்ள பைட் டான்ஸ் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட வீடியோ டப்பிங் மென்பொருளான டிக்டாக் உலகளவில் பல மில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் இந்த அப்பிளிக்கேஷன் தொடர்பாக புதிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது சைபர் தாக்குதல் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதற்கு சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Check Point Research மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பயனர்களுக்கு விசேட இணையத்தள இணைப்பு அடங்கிய குறுஞ்செய்தி ஒன்றினை அனுப்புவதன் மூலம் இவ்வாறு தகவல் திருட்டு இடம்பெறலாம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க மற்றும் இந்திய இராணுவத்தினர் டிக் டாக் அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.