Loading...
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் ஆரோக்கியமான உணவுகளை தேர்தெடுத்து உண்ணுவது அவசியமானது ஆகும்.
Loading...
அந்தவகையில் கர்ப்பம் தரித்த பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுப்பட்டியல் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
- கர்ப்பிணி பெண்கள் வழக்கத்தை விட மாறாக மூன்று வேளைக்கு பதில் ஆறு வேளை உணவு உட்கொள்ள வேண்டும்.
- சைவ உணவுகளை பொறுத்தவரை தானியங்கள், பருப்புகள், பயிறுவகைகள், காய்கறி, பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை கட்டாயம் உட்கொள்ள வேண்டும்.
- பால், தயிர், வெண்ணெய், நெய், மோர், பாலாடைக்கட்டி என புரதம் நிறைந்த பால் சார்ந்த பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- முந்திரி, காய்ந்த திராட்சை, வேர்க்கடலை, நெல்லிக்காய், அத்திப்பழம் போன்ற உலர் பழங்கள் மற்றும் கோட்டை வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- அசைவ உணவுகளில் முட்டை, மீன், ஆடு, கோழி இறைச்சி, ஆட்டு ஈரல் போன்றவற்றை சாப்பிடலாம்.
- குழந்தையின் வளர்ச்சிக்கு போலிக் அமிலம் மற்றும் இரும்பு சத்துக்கள் மிகமிக அவசியம் எனவே அத்தகைளய சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
- இரும்பு சத்து நிறைந்த முருங்கை கீரை, பேரிச்சம் பழம், தர்பூசணி, உலர்ந்த திராட்சைகள், காய்ந்த சுண்டைக்காய், வெல்லம், பனங்கற்கண்டு, பாதாம், ஆட்டு ஈரல் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- கர்ப்பம் தரித்த நேரங்களில் அதிகப்படியான தண்ணீர் குடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
Loading...