Loading...
ஐக்கிய இராச்சியத்தில் பிரபலமான தொலைபேசி வலையமைப்பு சேவை வழங்கும் நிறுவனங்களுள் O2 நிறுவனமும் ஒன்றாகும்.
இந்நிறுவனத்தின் வலையமைப்பு சேவையை பெற்றுக்கொள்ளும் iPhone XR பாவனையாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.
அதாவது இவர்களுக்கு தொலைபேசி சிக்னல் கிடைத்திருக்கவில்லை.
இதனால் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தவோ அல்லது பெற்றுக்கொள்ளவோ முடியாமல் தவித்துள்ளனர்.
Loading...
4G டேட்டா சேவை உட்பட எந்தவொரு சேவையையும் பெற்றுக்கொள்ளமுடியாது இருந்துள்ளது.
எனினும் ஏனைய கைப்பேசி பாவனையாளர்கள் இவ்வாறன எந்தவொரு பிரச்சனையையும் எதிர்நோக்கியிருக்கவில்லை.
இதேவேளை இப் பிரச்சனைக்கான தீர்வினை அடுத்த மென்பொருள் பதிப்பில் வெளியிடுவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Loading...