Loading...
சாம்சுங் நிறுவனம் விரைவில் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்நிலையில் Samsung Galaxy Xcover Pro எனும் குறித்த கைப்பேசியின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி 6.3 அங்குல அளவுடைய Full HD+ தொடுதிரையினைக் கொண்ட குறித்த கைப்பேசியானது Samsung Exynos 9611 Processor ஐ கொண்டுள்ளது.
Loading...
அத்துடன் பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
இவற்றுடன் 13 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 25 மெகாபிக்சல்களை உடைய 2 கமெரா மற்றும் 8 மெகாபிக்சல்களை உடைய ஒரு கமெரா என 3 பிரதான கமெராக்களையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் Android 10 இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருப்பதுடன், 4,000 mAh மின்கலத்தினையும் கொண்டுள்ளது.
Loading...