Loading...
ஒருவருக்கு வயிற்றுப் புண் வருவதற்கு காரணம் சரியான நேரத்தில் உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது தான்.
ஏனெனில் சரியான நேரத்தில் உணவுகளை சாப்பிடாமல் இருந்தாலோ அல்லது உணவைத் தவிர்த்தாலோ, இரைப்பையில் உணவை செரிக்க உற்பத்தி செய்யப்படும் அமிலத்தால், இரைப்பைச் சுவர்கள் அரிக்க ஆரம்பித்து, வயிற்றுப் புண்ணை உண்டாக்கிவிடும்.
Loading...
இதனை ஆரம்பத்தில் சரி செய்வது சிறந்தது. அந்தவகையில் தற்போது வயிற்று புண் விரைவில் குறைக்கும் உணவுகள் பற்றி பார்ப்போம்.
- வயிற்றுப் புண் இருந்தால், அதிலிருந்து விரைவில் விடுபட தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்.
- அரிசியில் உள்ள குறிப்பிட்ட சில உட்பொருட்கள் தான், வயிற்றுப் புண்ணால் ஏற்படும் வலியைப் போக்குவதாக கருதுகின்றனர். அரிசி மட்டுமின்றி, பார்லி மற்றும் கோதுமை போன்றவையும் வயிற்றுப் புண்ணில் இருந்து விடுவிக்கும்.
- ஆப்பிளை வயிற்றுப் புண் இருப்பவர்கள் சாப்பிட்டால், அது குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.
- பிரட் டோஸ்ட் வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கும் ஏற்ற அற்புதமான உணவுப் பொருள். ஏனெனில் இது வயிற்றில் உள்ள அமிலத்தை நீர்க்கச் செய்துவிடும்.
- கேரட்டில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால், இதை வயிற்றுப் புண் உள்ளவர்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.
- நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த தயிரை ஒருவர் அன்றாடம் சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் புண் வருவது தடுக்கப்படும். மேலும் தயிர் மென்மையான செரிமானத்திற்கு உதவி, வயிற்று வலியைக் குறைக்கும்.
- பால் மற்றும் முட்டை வயிற்றில் உள்ள அமிலத்தை நீர்க்கச் செய்வதால், இது வயிற்றுப் புண்ணால் ஏற்படும் வலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.
- இறால் மற்றும் மீனை வயிற்றுப் புண் இருப்பவர்கள் அடிக்கடி சாப்பிட்டால், விரைவில் விடுபடலாம்.
- வயிற்றுப் புண் இருந்தால், தேனை அவ்வப்போது சாப்பிடுங்கள். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள், வயிற்றில் புண்ணை உண்டாக்கும் எச். பைலோரி பாக்டீரியாவை அழித்து, இரைப்பைச் சுவர், உணவுக் குழாய், குடல் போன்றவற்றின் உட்பகுதியை மென்மையாக வைத்து, வலியைக் குறைக்க உதவும்.
- முட்டைக்கோஸை வேக வைத்து அடிக்கடி வயிற்றுப் புண் இருப்பவர்கள் சாப்பிட்டு வந்தால், அது இரைப்பைச் சுவற்றை சுற்றி சளி உற்பத்தியை மேம்படுத்தி, அல்சரில் இருந்து விடுவித்து நல்ல பாதுகாப்பை வழங்கும்.
- உருளைக்கிழங்கை வேக வைத்து சூப்பாகவோ, கஞ்சியாகவோ சாப்பிடுவது மிகவும் நல்லது.
Loading...