பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்றைய தினம் நாடாளுமன்றில் முன்னிலையாகவுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில், இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு பொலிஸ்மா அதிபர் தொலைபேசியில் உரையாற்றிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளவே இன்றை தினம் நாடாளுமன்றில் முன்னிலையாகவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் குறித்த உரையாடலின் போது சேர் என்றே அழைத்துள்ளார்.
மேலும், சில உயர்மட்ட அதிகாரிகளிடம் மாத்திரம் தான் அவர் உரையாற்றியிருக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் அல்லது சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோரின் உத்தரவுக்கு அமைய பொலிஸ்மா அதிபர் செயற்ப்பட்டிருக்கலாம் என குறித்தகொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.