தமிழகத்தில் தன் கண் முன்னால் மனைவி இறந்த துக்கம் தாளாமல் அதிர்ச்சியில் கணவன் இறந்த நிலையில் இருவரின் உடலும் அருகருகில் புதைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ் (60), அவரது மனைவி இந்திரா (55). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
கணவன் மனைவியான நாகராஜ், இந்திரா ஆகியோர் ஆரம்பத்திலிருந்தே இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர்.
உறவினர் வீடு நல்லது கேட்டது விசேடங்களுக்கு எங்கு சென்றாலும் ஜோடியாக இணைபிரியாமல் சென்று வருவார்களாம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்திராவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் இந்திரா சிகிச்சை பலனின்றி கணவர் நாகராஜ் முன்னிலையில் இறந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நாகராஜ் அங்கேயே மயங்கி விழுந்தார். உடன் அங்கு இருந்த மருத்துவர் சோதித்து பார்த்தபோது நாகராஜும் இறந்து விட்டது தெரிந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கணவன், மனைவி இருவரது உடலையும் உடல்களையும் அருகருகே அஞ்சலிக்காக வைத்தனர்.
அதன்பின்னர் அங்குள்ள சுடுக்காட்டுக்கு எடுத்து சென்று இருவரது உடலையும் அருகருகே வைத்து புதைத்தார்கள்.
எந்த நிலையிலும் பிரியாத கணவனும், மனைவியும் சாவிலும் இணைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் சோகத்துடன் கூறினார்கள்.