அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை ஈரான் மீறினால் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் அந்த நாடு அணு ஆயுதங்களை வைத்திருக்க கூடும் என்ற எச்சரிக்கை தகவலை பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா-ஈரான் இடையே நடக்கும் போர் பதற்றம் காரணமாக அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்க ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களுக்கான அவசர கூட்டம் பெல்ஜியமில் இருக்கும் Brussels-ல் இன்று நடைபெற்றது.
இதையடுத்து பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் Jean-Yves Le Drian, கடந்த 2015-ஆம் ஆண்டு போடப்பட்ட அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை ஈரான் மீறினால் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் அந்நாடு ஆணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடாக மாறலாம் என்று எச்சரித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுத பரவல் தடை ஒபந்ததை மீறுவதை தொடர்ந்தால், மிகக் குறுகிய காலத்திலே அந்நாட்டில் அணு ஆயுததை உருவாக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
அதாவது ஈரான் ஈரான், அணு ஆயுதங்களை தயாரித்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக சில ஆண்டுகளுக்கு முன், ஐ.நா சபையில் புகார் கூறிய அமெரிக்கா, அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கச் செய்தது.
ஆனால், ஈரான், தங்களிடம் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் இருந்தபோதிலும், அணு ஆயுதங்கள் எதையும் தயாரிக்கவில்லை என்று கூறியது.
இருப்பினும் அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், ரஷியா, ஜேர்மனி போன்ற நாடுகள் விதித்த பொருளாதார தடையால், கடுமையன பொருளாதார பின்னடைவை சந்தித்த ஈரான், அணு ஆயுதப் பரவல் தவிர்ப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ள தயாராக இருப்பதாக, ஈரான் அறிவித்தது.
அதன் பின்னர், ஈரானுக்கும், வளர்ச்சி அடைந்த ஆறு நாடுகளுக்கும் இடையே கடந்த ஜூலை மாதம் 14-7-2015 அன்று அணு ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதன் படி ஈரான் தங்கள் நாட்டில் இருக்கும் யுரேனியத்தை செறியூட்டி, அணு குண்டாக மாற்ற பயன்படும் சென்ட்ரிபியூஸ் எண்ணிக்கை மூன்றில் இரு பங்குக்கும் கீழாக குறைக்கப்படும், அடுத்த 15 ஆண்டுகளுக்கு 3.67 சதவீதத்துக்கு அதிகமாக யுரேனியத்தை செறிவூட்டக் கூடாது என முடிவு செய்யப்பட்டது.
ஆனால் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகு வீடியோ ஆதாரத்துடன் ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்டிருந்தார். இதனால் அமெரிக்கா ஈரான் மீது பொருளாதார தடைகள் விதிக்க, ஈரான் அப்போதே இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியே வேண்டும் என்று கூறியிருந்தது.
தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதலால், ஈரான் நிச்சயமாக இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறலாம் என்றும் கூறப்படுகிறது. அப்படி ஈரான் வெளியேறினால் அணு அயுதங்களை தயாரிக்கலாம், குறிப்பிட்ட சில நாடுகள் மீது தாக்குதலை நடத்தலாம் என்ற அச்சம் நிலவியுள்ளது.