தங்கள் குழந்தையை கனடாவில் ஆயாவின் பொறுப்பில் விட்டு வந்த பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன் கனடாவுக்கு பறந்துள்ள நிலையில், இளவரசர் ஹரியும் பிரித்தானியாவை விட்டு வெளியேறியிருக்கலாம் என கருதப்படுகிறது.
கனடாவுக்கு விடுமுறையை செலவிடுவதற்காக சென்றிருந்த பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும், தங்கள் மகன் ஆர்ச்சியை, குழந்தையை கவனித்துக்கொள்ளும் ஆயா மற்றும் மேகனின் நெருங்கிய தோழி Jessica Mulroney ஆகியோரின் பொறுப்பில் கனடாவில் விட்டு விட்டு, பிரித்தானியா திரும்பியுள்ளனர்.
மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து விலகுவதாக அதிர்ச்சியளிக்கும் அறிக்கையை வெளியிட்டுவிட்டு, மேகன் மீண்டும் கனடாவுக்கு திரும்பிவிட்டார்.
அவர்கள் மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்களை கலந்தாலோசிக்காமல் எடுத்த முடிவு மகாராணியாரை காயப்படுத்தியதுடன், கோபமடையவும் செய்தது.
காரணம், ஏற்கனவே அதிரடி முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம் என மகாராணியார் தனது செல்லப்பேரனை கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருந்தாராம்.
அதையும் மீறி, மகாராணியாரிடமோ, தனது தந்தை சார்லசிடமோ, அண்ணன் வில்லியமிடமோ ஆலோசிக்காமல் நேரடியாக ஊடகங்களுக்கு தங்கள் முடிவை ஹரி, மேகன் தம்பதி அறிவித்தார்கள்.
இதைத் தொடர்ந்து நேற்றிரவு மகாராணியார் வரிசையாக தொலைபேசி அழைப்புகள் செய்து, தனது மகன் சார்லஸ், பேரன் வில்லியம் மற்றும் ஹரியிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தினாராம்.
ஆனால், ஹரியின் பதவிக்கு ஆபத்து வந்துள்ள நிலையில், அவர் பிரித்தானியாவை விட்டு வெளியேற திட்டமிட்டிருந்தாராம்.
ஆனால், அவர் உண்மையிலேயே வெளியேறிவிட்டாரா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லையாம்.
மேகன் வேண்டுமானால் தனது விருப்பப்படியே கனடாவில் இன்னும் கொஞ்ச காலம் இருக்கலாம், பிரித்தானியாவில் தொடர்ந்து இருக்கவேண்டாம் என்று கூட திட்டமிட்டிருக்கலாம். ஆனால், ஹரி அப்படி இருக்க முடியாது.
அவர் அடுத்த வாரம் பிரித்தானியாவில் இருந்தாகவேண்டும், காரணம், அடுத்தவியாழக்கிழமை முக்கிய நிகழ்வு ஒன்றில் அவர் பங்கேற்றாக வேண்டும். ஹரி என்ன செய்யப்போகிறார் தெரியவில்லை!