அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், இரு நாட்டிற்கிடையிலான போர் குறித்து பாகிஸ்தான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா குவாசிம் சுலைமானியை கொன்ற பின், ஈரான் பழி தீர்க்கும் விதமாக ஈராக்கில் இருக்கும் அமெரிக்க தளங்களை தாக்கியதுடன், அமெரிக்காவிற்கு வலியை கொடுப்போம் என்று தொடர்ந்து கூறி வருகிறது.
இதனால் இரு நாடுகளும் பொறுமை காக்க வேண்டும், போர் எல்லாம் வேண்டாம், அதன் தாக்கம் வேறு. என்று உலக தலைவர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது பாகிஸ்தான் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கூறுகையில்,
பாகிஸ்தான் எந்தப் போரிலும் பங்குபெறப் போவதில்லை. ஏனெனில், கடந்த காலங்களில் மற்ற நாடுகளின் போர்களில் பங்கெடுத்ததன் மூலம் தவறுகளைச் செய்துள்ளோம்.
அவ்வாறான தவறுகளை மீண்டும் செய்யப்போவதில்லை என்ற வெளியுறவுக் கொள்கையை முன்வைக்கிறேன். இரு நாடுகளுக்கு இடையிலும் அமைதியைக் கொண்டுவர பாகிஸ்தான் முழுமுயற்சிகளை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இரான் – சவுதி அரேபியா மற்றும் இரான் – அமெரிக்கா இடையேயான பிரச்சனைகளை தீர்த்துவைக்க பாகிஸ்தான் முடிந்தவரை முயற்சிகளை மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே உள்ள வேறுபாடுகளைத் தவிர்க்க, பாகிஸ்தான் உதவி செய்யவும் தயாராக உள்ளது என்பதையும் டிரம்பிடம் முன் வைத்துள்ளேன்.
போர்களில் இருந்து யாரும் வெற்றிபெறப் போவதில்லை. இப்போது, பாகிஸ்தான் போர்களை நடத்தாது. ஆனால், நாடுகளை ஒன்றிணைக்க முயலும் என்று தெரிவித்தார்.