திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தான் பெற்ற 11வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தந்தையை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான தந்தையை இன்று (12) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் கந்தளாய், பராக்கிரம மாவத்தையைச் சேர்ந்த ஆர்.ஏ.அனுர பிரதீப் (42) ஆவார்.
கடந்த 11ம் திகதி இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த இவர், மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். இதையடுத்து, மனைவி முன் வீட்டிற்கு சென்று உறங்கியுள்ளார்.
இதன்போது தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கந்தளாய் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
விசாரணையை மேற்கொண்ட பொலிஸார் தந்தையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்பொழுது கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.