இலங்கை மட்டுமின்றி வெளிநாட்டு புலம்பெயர் தமிழர்களையும் தன்னுடைய ருசியான உணவுக்கு அடிமையாக்கி வைத்திருக்கிறார் றஞ்சனி தேவி.
யாழ்ப்பாணம் காங்கேசன் துறை வீதியில் குலப்பட்டி சந்திக்கு அருகில் இருக்கும் இவரது கிழங்கு பொரியல் கடை பிரபலமான ஒன்று.
72 வயதானாலும் துறுதுறுவென்று செயல்படும் ஆச்சியின் கைபக்குவத்துக்கு அடிமையானவர்கள் ஏராளம்.
இதன் சிறப்பம்சமே வாடிக்கையாளரின் கண்முன்னே உடனுக்குடன் கிழங்கு உரிக்கப்பட்டு சுவை மிகுந்த பொரியல் தயாராகிப்படுவதுதாம்.
இதுகுறித்து ஆச்சி கூறுகையில், நான் இஷ்டப்பட்டு விரும்பி இதனை செய்கிறேன். இயலுமான வரைக்கும் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இக்கடையை நடாத்தி வருகிறேன்.
வெளிநாட்டில் இருந்து ஆசையுடன் மக்கள் வாங்கி வரச்சொல்லி சாப்பிடுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.