இந்தியாவில் ஆடையின்றி புகைப்படம் பிரசுரிக்க அனுமதித்த ஒரே நடிகை ஷெர்லின் சோப்ரா. நாள்தோறும் கிறங்கடிக்கும் கவர்ச்சிப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இவர் கட்டுக் கடங்காத இளம் ரசிகர் பட்டாளத்தை தன்பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார். ஆனாலும் ‘என்னை தவறான பெண்ணாக சித்தரித்துவிடாதீர்கள். நான் ஆடைகளின்றி தோன்றினாலும், பாலுறவில் ஈடுபடுவது போன்ற காட்சிகளில் நடிக்கமாட்டேன்’ என்கிறார் ஷெர்லின்.
அவர் அளித்த பேட்டி வருமாறு-
உங்கள் காந்த உடல் அழகை நினைத்து நீங்கள் தற்பெருமை கொள்கிறீர்களா?
எல்லா பெண்களுக்கும் அவரவர் உடல் மீது தற்பெருமை இருக்கும். எனக்கும் அது உண்டு. எனது உடல் அமைப்பை பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். எனக்கு அது பெருமையே. எனது உடற்கட்டு தோற்றங்கள் அப்படி ஒப்பிட காரணமாக இருக்கின்றன. இருந்தாலும் மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நான் கவனத்தில் கொள்வதில்லை. ஏனெனில் நான் தனித்துவமானவள் என்பது எனக்குத் தெரியும். நானே எனது அதிநவீன பதிப்பு. நான் யார் மாதிரியுமானவள் அல்ல.
கவர்ச்சி உடலால் உங்களுக்கு கிடைத்திருக்கும் பலன்?
தேவைக்கு அதிகமாக எனது கவர்ச்சி படங்களை பற்றி பேசி சிலர் சிக்கலை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் அதுவும் எனது வளர்ச்சிக்கு உதவியிருக்கிறது.
உங்கள் படங்கள் மட்டும் அதிக சலசலப்பை உருவாக்குவது ஏன்?
நான் மட்டும் கவர்ச்சியாக தோன்றவில்லை. எத்தனையோ நடிகைகள் அப்படி தோன்றிக் கொண்டிருக்கிறார்கள். அதை பிரச்சினையாக்கிப் பார்ப்பது அவரவர் மனோ நிலையை பொறுத்தது. உணர்ச்சிபூர்வமான காட்சிக்காக அப்படி நடிக்கிறோம். அதை பாலுறவு ரீதியில் மற்றவர்கள் கற்பனை செய்வது அபத்தம்..”
‘பிளேபாய்’ இதழின் அட்டைப்படத்தில் ஆடையின்றி தோன்றி அதிக பரபரப்பை உருவாக்கிவிட்டீர்களே..?
அதை கலைக் கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும். கவர்ச்சியை ரசிக்க வேண்டும். விமர்சிக்கக்கூடாது. நான் ஆடையின்றி தோன்றினாலும், கமராவுக்கு முன்னால் பாலுறவு காட்சிகளில் எல்லாம் நடிக்க மாட்டேன். ஆனால் சிறந்த நோக்கத்திற்காக ஆடையில்லாமல் நடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நடிப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அது எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காவிட்டாலும், அதை செய்துகொடுப்பேன். காமசூத்ரா 3டி நாடகம் அப்படி எடுக்கப்பட்டதுதான். ஆனால் இயக்குனருடன் ஏற்பட்ட மோதலால் அதிலிருந்து விலகி விட்டேன். காமசூத்ராவில் மட்டும் நடித்திருக்கிறேன்.
உங்களை இணையதளத்தில் மோசமாக விமர்சிப்பது பாலியல் சீண்டலாக இருப்பதாக கருதுகிறீர்களா?
ஆம்! இணையதளத்தில் சிலர் எனக்கு மோசமான பெயர்களை சூட்டி விமர்சிக்கிறார்கள். அது வேடிக்கையாகவும், சீண்டிப் பார்க்கும் விதமாகவும் அமைகிறது. நான் பள்ளி செல்லும்போது பொருத்தமான, இறுக்கமான உடையில் சென்றது மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் இருந்தது. படப்பிடிப்பு தளத்திலும் அதுபோலவே உணர்கிறேன். அது எனது விமர்சகர்களுக்கு உறுத்தலை தரவேண்டிய அவசியம்இல்லை. எனது உடலை பார்த்துவிட்டு உள்ளத்தையும், நடத்தையையும் யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.
உங்களை யாராவது காதலிப்பதாக சொல்லியிருக்கிறார்களா?
நான் தோன்றும் கவர்ச்சி கதாபாத்திரங்களின் தன்மையை உணர்ந்து மரியாதை செலுத்தும் ஒருவரால்தான் என்னை நேசிக்க முடியும். மற்றவர்களின் காதலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் பாறை போன்று அசைக்க முடியாத உறுதியான உறவை தேடுகிறேன். தன்னலமற்ற, உணர்ச்சிபூர்வமான அன்புடன், தனித்துவமாக என்னை நேசிக்கும் ஒருவரை நானும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
காமசூத்ராவில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
காமசூத்ரா பற்றி பேசுவது என்றாலே பலரும் கிளுகிளுப்பு அடைந்துவிடுகிறார்கள். அந்த கிளு கிளுப்பை தக்கவைப்பதற்காக கேள்விமேல் கேள்வி கேட்கிறார்கள். அந்த காட்சியை பகலில் எடுப்பார்களா- இரவில் எடுப்பார்களா? காட்சியை எப்படி விளக்குவார்கள்- எப்படி படமாக்குவார்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதில் நடித்ததால் நான் கெட்டவள் இல்லை என்று நான் ஒவ்வொருவரிடமும் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதில் நடித்தாலும் நான் நல்லவள்தான் என்று எத்தனை பேரிடம் சொல்வது. நடிப்பு வேறு, வாழ்க்கை வேறு என்று புரியாதவர்களும் இந்த உலகத்தில் நிறைய இருக்கிறார்கள்.