தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஒரு ஜோடி ஜீவா – மீனா (ஹேமா ராஜ்குமிர்). இந்த சீரியல் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது, இதனை கொண்டாடும் விதமாக சமீபத்தில் கூட நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.
இதனையடுத்து நடிகை மீனா அளித்துள்ள பேட்டி ஒன்றில் முதலிரவு காட்சியின் புகைப்படம் ஒன்றை காட்டி இது குறித்து தொகுப்பாளி பேச சொல்லி இருக்கிறார். அப்போது மீனா ‘இது நான் ஜீ தமிழில் நடித்த மெல்ல திறந்தது கதவு சீரியலின் காட்சி. இந்த காட்சியை படமாக்கிய போது எங்களுக்கு அறை கிடைக்கவில்லை.
அப்பறம் எடுத்து கொள்ள நேரமும் இல்லை. இதனால் இயக்குனர் ரோட்டிலேயே தேவையான பொருட்களை வைத்து செட் அமைத்து படமாக்கினார். இந்த காட்சியை என்னால் மறக்கவே முடியாது. அதன் பிறகு எங்கனாலும் முதலிரவு செய்ய தயார்’ என கூறியுள்ளார்.