தனக்கு மிகவும் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய ரசிகர் மீது புகார் அளித்துள்ளார் நடிகை நந்திதா ஸ்வேதா.
நந்தா லவ்ஸ் நந்திதா என்ற கன்னட படத்தில் அறிமுகமானவர்தான் ஸ்வேதா. இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் மிகவும் பிரபலமானதால் நந்திதாவை தன் பெயரோடு சேர்த்துக்கொண்டார்.
அடுத்து அட்டகத்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்தார்.
தொடர்ந்து கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வந்த நந்திதா அவ்வப்போது தன்னுடைய படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில் இவரை பின்தொடரும் ரசிகர் ஒருவர் மிகவும் ஆபாசமான மெசேஜ்களை நந்திதாவுக்கு அனுப்பி வந்துள்ளார்.
இது தொடர்ந்து கொண்டே இருந்ததால் அந்த மெசேஜ்களை வெளியுலகுக்கு அம்பலப்படுத்திய நந்திதா, இதுபோன்ற நபர்களை என்ன செய்வது? இவர்களுக்கு குடும்பம் இல்லையா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.