Loading...
அஸர்பைஜானில் உயிரிழந்த மூன்று இலங்கை மாணவிகளின் சடலங்களும் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அஸர்பைஜானில் பாகு தலைநகரில் உள்ள காஸ்பியன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற இலங்கை மாணவிகள் மூவர், கடந்த 9ம் திகதி நச்சுக்காற்றை சுவாசித்ததில் உயிரிழந்திருந்தனர்.
அவர்கள் தங்கியிருந்த விடுதியின் கீழ்த்தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து பரவிய நச்சுக்காற்றை சுவாசித்திருந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட மூன்று மாணவிகளும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அவர்கள் உயிரிழந்திருந்தனர்.
Loading...
கடுவவெலவைச் சேர்ந்த மல்ஷா சந்தீபானி (23), தாருகி அமயா (21), அமோடியா மதுஹன்சி (24) ஆகியோரே உயிரிழந்தனர். சந்தீபனி, அமயா சகோதரிகள்.
உயிரிழந்த சடலங்கள் இன்று இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன.
Loading...