அஸர்பைஜான் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த இலங்கை மாணவிகள் இருவரின் இறுதிக்கிரியைகள் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளன.
அத்துடன், மற்றுமொரு மாணவியின் இறுதிக்கிரியைகள் கடுவெல பொமிரிய பொதுமயானத்தில் நாளை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அஸர்பைஜானில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி இலங்கை மாணவிகள் மூவர் உயிரிழந்தனர்.
பிலியந்தலைப் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 23 மற்றும் 21 வயதுடைய சகோதரிகள் இருவரும், கடுவெல பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அஸர்பைஜான் தீவிபத்தில் ஏற்பட்ட நச்சுவாயுவை சுவாசித்ததன் காரணமாகவே குறித்த மாணவிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் உயிரிழந்த மாணவிகள் மூவரின் சடலங்களும் அரச செலவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன