மறைந்த முதலமைச்சரான செல்வி. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கும் படம் ‘தலைவி’. ‘தலைவா’ திரைப்படத்தை எடுத்த AL விஜய் இந்த பயோபிக் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். கடந்த வருட இறுதியில் இந்த படத்தின் டீஸர் மற்றும் பஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் ஜெயலலிதாவாகவும் பிரபல நடிகர் அரவிந்த் சாமி தமிழகத்தின் “உங்கள் வீட்டுப் பிள்ளை” MGR ஆகவும் நடித்து வருகின்றனர். இன்று அவரின் 103 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு அவருடைய காதாபாத்திரத்தில் நடித்த ஒருக் காட்சியை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
அவரின் கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த் சாமியின் தத்ரூபமான நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. இதற்கு முன் வெளிவந்த செல்வி. ஜெயலலிதாவின் டீஸர் ரசிகர்களை இந்த அளவிற்கு கவரவில்லை என்றேக் கூறலாம்.