Loading...
யாழ்.கல்வியங்காட்டு பகுதியில் உள்ள சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்கு விசமிகள் சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளது.
வங்கி முகாமையாளரான வரதராஜா கேதீஸ்வர சர்மா என்பவரது வீட்டுக்குள் நேற்றிரவு புகுந்த இனம் தெரியாத நபர்கள் வீட்டு வளவினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
Loading...
இந்நிலையில் காருக்கு வைக்கப்பட்ட தீ முழுமையாக காரின் மீது பரவாததால் , கார் பகுதிகளவில் சேதமடைந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Loading...