மட்டக்களப்பு மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள், மாவட்ட உழவர்கள் மற்றும் கிராம மட்ட சமூக சமய அமைப்புக்களை இணைத்து நடாத்தும் 2020 ஆம் ஆண்டிற்கான உழவர் விழா நிகழ்வுகள் இன்று வவுணதீவு-ஈச்சந்தீவு ஸ்ரீ கண்ணகியம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது அறுவடை நிகழ்வு, இறை வழிபாடு, தைப்பவனி, கொடியேற்றம், தேசியகீதம், மங்கல விளக்கேற்றல், ஆசியுரை, வரவேற்பு நடனம், வரவேற்புரை, நெல் குற்றுதல், பொங்கல் பானையில் புத்தரிசியிடல், தலைமை உரை, தமிழ்த் தாய் வணக்கம், வசந்தன் கூத்து, கிராமிய நடனம், தமிழ் மொழி வாழ்த்து போன்ற பல நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மேலும் நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சு. ஸ்ரீகாந்த் மற்றும் பிரதேச செயலகங்களின் செயலாளர்கள், மாவட்ட, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உழவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.