Loading...
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலை அதிகாரிகளால் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி ரஞ்சனின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அனுமதிப்பத்திரம் காலாவதியான நிலையில் கைத்துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
Loading...
குறித்த வழக்கு தொடர்பிலேயே அவர் இன்று (17) நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை, சாதாரண கைதிகள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன், சிறைச்சாலை விதிமுறைக்கமைய மொட்டையடிக்கப்பட்டுள்ளார்.
Loading...